/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சுல்தான்பேட்டை அருகே புதுமாப்பிள்ளை தற்கொலைசுல்தான்பேட்டை அருகே புதுமாப்பிள்ளை தற்கொலை
சுல்தான்பேட்டை அருகே புதுமாப்பிள்ளை தற்கொலை
சுல்தான்பேட்டை அருகே புதுமாப்பிள்ளை தற்கொலை
சுல்தான்பேட்டை அருகே புதுமாப்பிள்ளை தற்கொலை
ADDED : பிப் 23, 2024 10:59 PM
சூலுார்:சுல்தான்பேட்டை அருகே, திருமணமான நான்கு நாட்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டது, சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை அடுத்த செஞ்சேரிமலையை சேர்ந்த மகாலிங்கம் மகன் அஸ்வின், 27; ஐ.டி., ஊழியர். இவருக்கும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுக்கும், கடந்த, 19ம்தேதி திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் அஸ்வின் தனது மனைவியுடன் செஞ்சேரிமலை வீட்டுக்கு வந்துள்ளார்.
நேற்று காலை, 5:00 மணிக்கு புதுப்பெண் கண்விழித்து பார்த்தபோது, அஸ்வினை காணவில்லை. அருகில் உள்ள அறைகளில் தேடியபோது, ஒரு அறையில், பிளாஸ்டிக் கவரால் முகத்தை இறுக கட்டி கொண்டு, அஸ்வின் கீழே கிடந்துள்ளார்.
அவரை மீட்ட குடும்பத்தினர், சுல்தான்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சூலுார் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே, அவர் இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து, சுல்தான்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப்பதிந்த போலீசார், அஸ்வின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.