/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/குப்பனுாரில் தொழிற்சாலை துவக்க பொதுமக்கள் வலியுறுத்தல்குப்பனுாரில் தொழிற்சாலை துவக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
குப்பனுாரில் தொழிற்சாலை துவக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
குப்பனுாரில் தொழிற்சாலை துவக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
குப்பனுாரில் தொழிற்சாலை துவக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
ADDED : ஜன 28, 2024 11:31 PM
அன்னுார்:அன்னுார் தாலுகாவில், குப்பனுார், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலுார், பொகலுார் ஆகிய ஊராட்சிகளில், தொழில் பூங்கா அமைப்பதாக 2022ல் டிட்கோ அறிவித்தது. இதை எதிர்த்து விவசாயிகள் மற்றும் 'நமது நிலம் நமதே' அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, தனியார் நிறுவனத்தின் நிலத்தில் மட்டும் தொழிற்சாலை அமைக்கப்படும். விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது என அரசு அறிவித்தது. இந்நிலையில், குப்பனுார் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் பொது மக்களில் ஒரு தரப்பினர் ஊராட்சி தலைவர் ரஞ்சிதாவிடம் அளித்த மனுவில், 'தமிழகத்தில் 5 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தொழில்கள் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. குப்பனுார் ஊராட்சியில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 500 ஏக்கர் நிலம் தரிசாக பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளது.
இந்நிலத்தை கையகப்படுத்தி மாசு ஏற்படுத்தாத தொழிற்சாலை மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் பலருக்கும் வேலை வாய்ப்பு ஏற்படும். இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், என கூறப்பட்டிருந்தது. தீர்மானம் நிறைவேற்றப்படும் என தலைவர் உறுதி அளித்தார்.
'குப்பனுார் ஊராட்சியில் தொழிற்சாலை துவக்க வலியுறுத்தி, அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், கோவை கலெக்டர் அலுவலகத்திலும் மனு தர உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் ஊராட்சி தலைவர் ரஞ்சிதா, வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.