ADDED : ஜூலை 22, 2024 12:23 AM
கோவை:கோவை சத்தி ரோட்டில் உள்ள புரோசோன்மால் 7ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, தள்ளுபடி விற்பனை நடந்தது.
எலக்ட்ரானிக், ஜவுளி, வீட்டு உபயோக பொருட்கள், மொபைல் போன், உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு, துவக்க விழா சலுகைகள் அளிக்கப்பட்டிருந்தன. 4,999 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால், குலுக்கல் முறையில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரானிக்ஸ் பொருளை வாங்க முடியும். ஜூலை 19, 20, 21ல் பிறந்தவர்களுக்கு 500 ரூபாய் மதிப்புள்ள கிப்ட் வவுச்சர்கள் வழங்கப்படடன.
நிறைவு விழாவில், நடந்த பேஷன் ஷோ உள்ளிட்ட பொழுது போக்கு நிகழ்ச்சியில் புரசோன் மால் வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர். பரிசுகள் வழங்கப்பட்டன.