/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : ஜூன் 22, 2025 11:13 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே குஞ்சிபாளையம் கிராமத்தில், ஸ்ரீ ராமஜெயம் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிர்வாக அறங்காவலர் சுகுமார் தலைமையும், சேவாலயம் அமைப்பு தலைவர் மயில்சாமி முன்னிலையும் வகித்தனர்.
பொள்ளாச்சி மேற்கு போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., மீனப்பிரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தொடர்ந்து, பெற்றோர்களை இழந்த, மாற்றுத்திறனாளி மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள 60 குழந்தைகளுக்கு, தலா, மூவாயிரம் ரூபாய் மதிப்பு உடைய கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இன்ஜினியர் நாச்சிமுத்து, தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஞானசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.