/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வைட்டமின் 'ஏ' திரவம் குழந்தைகளுக்கு வழங்கல் வைட்டமின் 'ஏ' திரவம் குழந்தைகளுக்கு வழங்கல்
வைட்டமின் 'ஏ' திரவம் குழந்தைகளுக்கு வழங்கல்
வைட்டமின் 'ஏ' திரவம் குழந்தைகளுக்கு வழங்கல்
வைட்டமின் 'ஏ' திரவம் குழந்தைகளுக்கு வழங்கல்
ADDED : மார் 18, 2025 09:58 PM

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அங்கன்வாடிகளில், குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
தமிழகத்தில், ஆறு மாதம் முதல் ஐந்து வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும், கடந்த, 17ம் தேதி முதல், 22ம் தேதி வரை, சிறப்பு முகாம்கள் வாயிலாக, வைட்டமின் 'ஏ' திரவம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், கிராம, நகர சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர், எஸ்.எச்.ஏ., பணியாளர்கள், இரண்டாமாண்டு ஏ.என்.எம்., பயிற்சி மாணவிகள் மற்றும் சுகாதார ஆய்வாளர், பயிற்சி மாணவர்கள் வாயிலாக அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கப்படுகிறது.
குறிப்பாக, ஆறு மாதம் முதல், 11 மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு, 1 மி.லி., மற்றும் 12 மாதம் முதல், 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, 2 மி.லி., திரவம் வழங்கப்படுகிறது.
இது குறித்து குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வீணா கூறியதாவது: பொதுமக்கள், தங்கள் அருகே உள்ள அங்கன்வாடி மையங்களில் நடக்கும் முகாம் வாயிலாக, குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ' திரவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கன்வாடிகளில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கப்படுகிறது. இவ்வாறு, கூறினார்.