/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ முதல்வருக்கு 2,000 தபால் கார்டு அனுப்பும் போராட்டம் முதல்வருக்கு 2,000 தபால் கார்டு அனுப்பும் போராட்டம்
முதல்வருக்கு 2,000 தபால் கார்டு அனுப்பும் போராட்டம்
முதல்வருக்கு 2,000 தபால் கார்டு அனுப்பும் போராட்டம்
முதல்வருக்கு 2,000 தபால் கார்டு அனுப்பும் போராட்டம்
ADDED : மே 21, 2025 11:47 PM
அன்னுார்; பசுமைவழிச் சாலைக்காக நிலம் கையகப்படுத்துவதை கைவிடக் கோரி முதல்வருக்கு 2,000 தபால் கார்டு அனுப்பும் போராட்டம் துவங்கியது.
கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, 1,912 கோடி ரூபாயில் பசுமை வழிச் சாலை திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்த, 630 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நில உரிமையாளரிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவை-சத்தி பசுமைவழிச் சாலை எதிர்ப்பு கூட்டமைப்பினர், நிலம் கையகப்படுத்துவதால் பாதிக்கப்படுவோர் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுத வேண்டும் என கோரிக்கை விடுத்தது.
'கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற, தற்போது உள்ள இருவழிச் சாலையில் போதுமான இடம் உள்ளது. எனவே சிறு தொழிற்சாலைகள், வீடுகள், விவசாயிகள் ஆகியவற்றை பாதிக்கும் பசுமைவழிச் சாலையை கைவிட வேண்டும். ஏற்கனவே உள்ள சாலையை அகலப்படுத்த வேண்டும்,' என்று கோரிக்கை விடுக்கும் கடிதம் தமிழக முதல்வருக்கு அனுப்பும் பணி நேற்று முன்தினம் துவங்கியது.
அன்னுார், கதவுகரை, கோவில்பாளையம் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முதல்வருக்கு கடிதம் அனுப்பினர். 'ஒரு வாரத்திற்குள் முதல்வருக்கு 2000 கடிதங்கள் அனுப்பப்படும்,' என கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.