/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தடையை மீறி ஆர்ப்பாட்டம்: பா.ஜ.,வினர் கைது தடையை மீறி ஆர்ப்பாட்டம்: பா.ஜ.,வினர் கைது
தடையை மீறி ஆர்ப்பாட்டம்: பா.ஜ.,வினர் கைது
தடையை மீறி ஆர்ப்பாட்டம்: பா.ஜ.,வினர் கைது
தடையை மீறி ஆர்ப்பாட்டம்: பா.ஜ.,வினர் கைது
ADDED : மார் 18, 2025 04:41 AM

அன்னுார் : தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த பா.ஜ., வினர் 45 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் சென்ற தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்பட நூற்றுக்கணக்கானவர்கள் தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, அன்னுார் வடக்கு, தெற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், அண்ணாமலை கைதை கண்டித்தும், டாஸ்மாக் ஆயிரம் கோடி ரூபாய் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தமிழக அரசு பதவி விலகக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்று மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 45 பேரை கைது செய்து திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
பா.ஜ., வடக்கு ஒன்றிய தலைவர் ஆனந்தன், தெற்கு ஒன்றிய தலைவர் ரத்தினசாமி, பொதுச்செயலாளர்கள் ஈஸ்வரன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
காரமடை கார் ஸ்டாண்டில், கோவை வடக்கு மாவட்ட துணை தலைவர் விக்னேஷ் தலைமையில் பா.ஜ.,வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2 பெண்கள் உட்பட 21 பேரை போலீசார் வலுகட்டாயமாக இழுத்து சென்று கைது செய்தனர். இதே போல், மேட்டுப்பாளையத்தில் நகர தலைவர் உமா சங்கர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நரசிம்ம நாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்டில் பெரியநாயக்கன்பாளையம் பா.ஜ.,மண்டல தலைவர் லோகேஷ் ராம், தொழில் பிரிவு பொதுச்செயலாளர் ரவி, ஒன்றிய பொதுச் செயலாளர் கிஷோர் உள்ளிட்டோர் தலைமையில், 20க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் பா.ஜ.,வினரை கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.