/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சிலை திறக்க அனுமதி தராவிட்டால் போராட்டம் சிலை திறக்க அனுமதி தராவிட்டால் போராட்டம்
சிலை திறக்க அனுமதி தராவிட்டால் போராட்டம்
சிலை திறக்க அனுமதி தராவிட்டால் போராட்டம்
சிலை திறக்க அனுமதி தராவிட்டால் போராட்டம்
ADDED : ஜூன் 11, 2025 09:01 PM
அன்னுார்; நல்லி செட்டிபாளையத்தில் சொந்த இடத்தில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி தராமல் இழுத்தடிப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரே கவுண்டன் பாளையம் ஊராட்சி, நல்லிசெட்டிபாளையம், ஸ்ரீராம் நகரில், இளைஞர் நற்பணி மன்றம் செயல்பட்டு வருகிறது. சிறுவர், சிறுமியருக்கு இலவச டியூசன் கற்றுத் தரப்படுகிறது. இந்த வளாகத்தில் சட்ட மேதை அம்பேத்கரின் முழு உருவ சிலை பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதை திறக்க அனுமதி கோரி 11 மாதங்களாக போராடி வருகின்றனர்.
இதுகுறித்து நற்பணி மன்ற நிர்வாகிகள் கூறுகையில், 'ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், நெடுஞ்சாலை துறை, மாவட்ட நிர்வாகம் என அனைத்து தரப்பிலும் மனு கொடுத்து விட்டோம். எனினும் மாவட்ட நிர்வாகம் அனுமதி தராமல் இழுத்தடிக்கிறது. மன்றத்திற்கு சொந்தமான பட்டா நிலத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது. பொது இடத்தில் நிறுவப்படவில்லை.
எனினும் அனுமதி தராமல் தாமதிக்கின்றனர். விரைவில் அனுமதி தராவிட்டால் நல்லி செட்டிபாளையம் மக்களை திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்,' என்றனர்.