/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரேஷனில் தேங்காய் எண்ணெய் விற்க கோரி ஆர்ப்பாட்டம் ரேஷனில் தேங்காய் எண்ணெய் விற்க கோரி ஆர்ப்பாட்டம்
ரேஷனில் தேங்காய் எண்ணெய் விற்க கோரி ஆர்ப்பாட்டம்
ரேஷனில் தேங்காய் எண்ணெய் விற்க கோரி ஆர்ப்பாட்டம்
ரேஷனில் தேங்காய் எண்ணெய் விற்க கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 23, 2025 11:20 PM

சூலுார்; பாமாயிலை தடை செய்து, ரேஷன் கடைகள், சத்துணவு கூடங்களில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரி, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி சார்பில், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விற்க கோரி, 100 நாள், 100 ரேஷன் கடைகள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 72வது ஆர்ப்பாட்டம், கண்ணம்பாளையத்தில் நடந்தது.
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில தலைவர் சண்முகம், மாநில செயலாளர் சந்திரசேகர், மாநில ஒருங்கிணைப்பாளர் மயில்சாமி, சூலுார் வட்டார தலைவர் நவீன் குமார், செயலாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பல நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ரேஷன் கடைகள், சத்துணவு கூடங்களில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.