/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்கலாம் விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்கலாம்
விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்கலாம்
விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்கலாம்
விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்கலாம்
ADDED : ஜூன் 15, 2025 10:07 PM
அன்னுார்; 'மண் பரிசோதனை செய்தால், இடுபொருள் செலவு குறையும்,' என வேளாண் பேராசிரியர் தெரிவித்தார்.
தமிழக அரசின் வேளாண்துறை சார்பில், 'உழவரை தேடி, வேளாண்மை' என்னும் முகாம் ஊராட்சி தோறும் நடத்தப்படுகிறது. காட்டம்பட்டி ஊராட்சியில் நடந்த முகாமில் வேளாண் உதவி இயக்குனர் பிந்து பேசுகையில், ''விவசாயிகள், தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, மானியத்தில், சொட்டு நீர் பாசனம் அமைக்கலாம், என்றார். தமிழ்நாடு வேளாண் பல்கலை பேராசிரியர் மருதாசலம் பேசுகையில், மண் பரிசோதனை செய்வதன் வாயிலாக எந்த சத்து உள்ளது என தெரிந்து, பற்றாக்குறைக்கு மட்டும் உரம் இடலாம். இடுபொருள் செலவு குறையும், என்றார். வேளாண் விற்பனை துறை சார்பில், விளை பொருட்களை மதிப்பு கூட்டி விற்றால் அதிக வருமானம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. முகாமில் மண் பரிசோதனை செய்யப்பட்டது. இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டன.