/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'புதிய இயந்திர மானியம் பெறுவதில் சிக்கல்' 'புதிய இயந்திர மானியம் பெறுவதில் சிக்கல்'
'புதிய இயந்திர மானியம் பெறுவதில் சிக்கல்'
'புதிய இயந்திர மானியம் பெறுவதில் சிக்கல்'
'புதிய இயந்திர மானியம் பெறுவதில் சிக்கல்'
ADDED : ஜூன் 15, 2025 10:26 PM
கோவை; தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் (டேக்ட்) சங்க நிர்வாகிகள் கூட்டம், சங்க தலைவர் ஜேம்ஸ் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
குறுந்தொழில் முனைவோர், ஆட்டோமேடிக் இயந்திரங்கள், சி.என்.சி., வி.எம்.சி., இயந்திரங்களைக் கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது.
புதிய இயந்திர கொள்முதலுக்கு, தமிழக அரசு 25 சதவீத மானியம் வழங்குகிறது. ஆனால், மானியம் பெறுவதற்கான நடைமுறையை, எளிமைப்படுத்த வேண்டும்.
விண்ணப்பங்களை ஆய்வு செய்ய, அதிகாரிகள் பல மாதங்கள் எடுத்துக் கொள்வதால், மானியம் பெற பல மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
மாவட்ட தொழில் மையத்தில் அதிகாரிகள் பற்றாக்குறையும் இதற்கு ஒரு காரணம். மாவட்ட தொழில் மையத்தில் முழு எண்ணிக்கையில், அதிகாரிகளை நியமிக்க அரசு முன் வர வேண்டும்.
இவ்வாறு, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சங்க பொதுச்செயலாளர் பிரதாப் சேகர், பொருளாளர் லீலா கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.