/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு பள்ளி மாணவியருக்கு அறக்கட்டளை சார்பில் பரிசு அரசு பள்ளி மாணவியருக்கு அறக்கட்டளை சார்பில் பரிசு
அரசு பள்ளி மாணவியருக்கு அறக்கட்டளை சார்பில் பரிசு
அரசு பள்ளி மாணவியருக்கு அறக்கட்டளை சார்பில் பரிசு
அரசு பள்ளி மாணவியருக்கு அறக்கட்டளை சார்பில் பரிசு
ADDED : ஜூன் 09, 2025 10:00 PM

வால்பாறை; பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவிகளுக்கு, அறக்கட்டளை சார்பில் பரிசு வழங்கபட்டது.
வால்பாறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவியர் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவியரை பாராட்டும் வகையில், சென்னையை சேர்ந்த அரசு பணி ஓய்வு பெற்ற ஊழியர்கள் சார்பில் துவங்கப்பட்ட அறக்கட்டளை சார்பில், பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த அனுபிரபா, பாவனா, ரிதன்யா ஆகியோருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி முன்னிலையில், அறக்கட்டளை உறுப்பினர் அதிசயமணி பரிசுத்தொகை வழங்கினார். பள்ளி ஆசிரியர்கள், மாணவியரின் பெற்றோர் கலந்து கொண்டனர்.