/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரயில்வே செயலி பற்றி ஒரு நிமிட வீடியோ வெற்றியாளர்களுக்கு காத்திருக்கும் பரிசு ரயில்வே செயலி பற்றி ஒரு நிமிட வீடியோ வெற்றியாளர்களுக்கு காத்திருக்கும் பரிசு
ரயில்வே செயலி பற்றி ஒரு நிமிட வீடியோ வெற்றியாளர்களுக்கு காத்திருக்கும் பரிசு
ரயில்வே செயலி பற்றி ஒரு நிமிட வீடியோ வெற்றியாளர்களுக்கு காத்திருக்கும் பரிசு
ரயில்வே செயலி பற்றி ஒரு நிமிட வீடியோ வெற்றியாளர்களுக்கு காத்திருக்கும் பரிசு
ADDED : மார் 21, 2025 02:25 AM

கோவை,: யு.டி.எஸ்., செயலியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக ஒரு நிமிட வீடியோ எடுத்து வரும், 31ம் தேதிக்குள் பதிவு செய்து பரிசு வெல்லலாம் என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை ரயில்வே ஸ்டேஷனில் நேற்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஸ்டேஷன் இயக்குனர் சச்சின் குமார் கூறியதாவது:
இந்திய ரயில்வே 'டிஜிட்டல்' மயம் வாயிலாக டிக்கெட் விற்பனை உள்ளிட்டவற்றை எளிமையாக்கி வருகிறது. அதில், முன்பதிவில்லா டிக்கெட் பதிவு முறை(யு.டி.எஸ்.,) செயலியும் ஒன்று. இதில், பயணிகள் சீசன் டிக்கெட், மாதாந்திர பாஸ், பிளாட்பாரம் டிக்கெட், சலுகை டிக்கெட் உள்ளிட்டவை பெறமுடியும்.
டிக்கெட் கவுன்டர்களில் காத்திருக்காது, வீட்டில் இருந்தவாறு டிக்கெட் முன்பதிவு செய்து பயன்பெறும் வகையிலான, இந்த செயலி குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. கோவை ரயில்வே ஸ்டேஷனில் மொத்த டிக்கெட் விற்பனையில், 6.5 சதவீதம் மட்டுமே யு.டி.எஸ்., முறையில் நடக்கிறது.
எனவே, மக்களிடம் இதை கொண்டு செல்லும் விதமாக யு.டி.எஸ்., குறித்த ஒரு நிமிட வீடியோ எடுத்து பதிவு செய்பவர்களுக்கு படைப்பாற்றல், வீடியோ விருப்பம்(லைக்ஸ்) என இரு பிரிவுகளில் ரொக்க பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
வீடியோக்களை வரும், 31ம் தேதிக்குள் யு.டி.எஸ்., 'கியூ.ஆர்., கோடு' வாயிலாக பதிவு செய்ய வேண்டும். போட்டியில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது.
மேலும், விபரங்களுக்கு, 98405 69961, 75023 98686 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
ஸ்டேஷன் மாஸ்டர் சதீஸ் சகாதேவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.