/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை; ஒன்றியக் குழு கூட்டத்தில் திட்டவட்டம்காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை; ஒன்றியக் குழு கூட்டத்தில் திட்டவட்டம்
காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை; ஒன்றியக் குழு கூட்டத்தில் திட்டவட்டம்
காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை; ஒன்றியக் குழு கூட்டத்தில் திட்டவட்டம்
காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை; ஒன்றியக் குழு கூட்டத்தில் திட்டவட்டம்
ADDED : ஜன 10, 2024 10:27 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி தெற்கு ஒன்றியக்குழு கூட்டத்தில், பெரும்பாலான கவுன்சிலர்கள் தங்கள் பகுதி பிரச்னைகளை முன்வைத்து பேசாமல் அமைதியாக பங்கேற்றனர்.
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியக்குழு கூட்டம், ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. தலைவர் லட்சுமி தலைமை வகித்தார். துணைத்தலைவர் சண்முகசுந்தரம், பி.டி.ஓ.,க்கள் பாலசுப்ரமணியம், லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர் ஒருவர் மட்டும், மேம்பாட்டு வளர்ச்சி பணிகளுக்கு, அரசிடம் இருந்து, கூடுதலாக நிதி ஒதுக்கீடு பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தினார். மற்ற கவுன்சிலர்கள், தங்கள் பகுதியிலுள்ள பிரச்னைகளை பேசாமல், மக்கள் கோரிக்கைகளை முன்வைக்காமல், 'மவுனம்' காத்தனர்.
கூட்டத்தில், வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் பேசியதாவது:
சுகாதாரத்துறையின், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் 26 கிராம ஊராட்சிகள் மட்டுமின்றி ஜமீன்ஊத்துக்குளி, சூளேஸ்வரன்பட்டி, சமத்துார் ஆகிய பேரூராட்சிகளும் அடங்கு. இப்பகுதியில் உள்ள மக்கள் தொகை எண்ணிக்கை, 1,30,498 பேர். கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால், சுகாதாரப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவ கல்லுாரி, பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ஒன்றியத்திற்கு உட்பட்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறும் காய்ச்சல் நோயாளிகளுக்கு ஏற்ப, அந்தந்த பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தப்படுகிறது. குறிப்பாக, கொசு ஒழிப்பு பணியாளர்களை உள்ளடக்கி, புழு நிலையிலேயே கொசுக்கள் அழிக்கப்படுகிறது. இதற்கு, ஊராட்சி நிர்வாகங்களின் ஒத்துழைப்பும் அவசியம். பாதிப்பு உள்ள இடங்களில் கொசு மருந்து அடிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து, வேளாண் திட்டங்கள், அவை சார்ந்த மானியங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. பதிலளித்த ஒன்றிய அதிகாரிகள், ''மேம்பாட்டு பணிக்காக, ஒன்றியத்திற்கு கூடுதல் ஒதுக்கீடு பெற அரசிடம் கோரப்படும். டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என தெரிவித்தனர். கூட்டத்தில், 193 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.