ADDED : ஜூன் 18, 2024 02:00 PM

வணக்கம்,
ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் மண் காப்போம் இயக்கம் இணைந்து நடத்தும் 'உணவுக்காடு வளர்ப்பு & மாபெரும் முக்கனி திருவிழா' எனும் பிரம்மாண்ட கருத்தரங்கம் புதுக்கோட்டையில் நடைபெற உள்ளது.
இதில் ஏராளமான வேளாண் வல்லுநர்கள், விஞ்ஞானிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உணவுக்காடு வளர்ப்பு, விவசாயிகளின் வருவாய் மேம்பாடு, வாழை வளர்ப்பு உள்ளிட்ட பல முக்கிய தலைப்புகளில் பேச உள்ளனர். இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இந்நிகழ்ச்சி குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு தங்களை அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி,
நாள்: 19.06.2024, புதன்கிழமை
நேரம்: காலை 11.30 மணி
இடம்: பிரஸ் கிளப், சென்னை
ஊடக தொடர்புக்கு: 90435 97080