/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தபால் துறை ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தபால் துறை ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தபால் துறை ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தபால் துறை ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தபால் துறை ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
ADDED : ஜூன் 13, 2025 10:12 PM
கோவை; தபால் துறை சார்பில், கோவை கோட்ட அளவிலான ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 26ம் தேதி நடக்கிறது.
கோவை தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சிவசங்கர் அறிக்கை: தபால் துறை சார்பில், கோவை கோட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கோவை தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வரும் 20ம் தேதி காலை 11:00 மணிக்கு நடக்கிறது.
தபால் ஓய்வூதியர்கள், தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால், அதுகுறித்து docoimbatore.tn@indiapost.gov.in என்ற இ-மெயில் முகவரிக்கோ, அல்லது தபாலில் அனுப்புவதாக இருந்தால், தபால் உறையின் மீது 'பென்சன் அதாலத்' என்று எழுதி, தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர், கோவை கோட்டம், கோவை 641001 என்ற முகவரிக்கோ, வரும் 20ம் தேதிக்குள் முன்பாக கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.