/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மேயர் தலைமையில் பொங்கல் விழா!மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மேயர் தலைமையில் பொங்கல் விழா!
மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மேயர் தலைமையில் பொங்கல் விழா!
மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மேயர் தலைமையில் பொங்கல் விழா!
மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மேயர் தலைமையில் பொங்கல் விழா!
ADDED : ஜன 13, 2024 01:25 AM

கோவை:மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், மேயர் கல்பனா தலைமையில் தைப்பொங்கல் விழா நேற்று நடந்தது.
இதில், மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்றனர்.
வளாகத்தின் ஒரு பகுதியில், மாநகராட்சி பெண் ஊழியர்கள் பொங்கல் வைக்க, மறுபுறம், தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு போற்றும் விதமாக கோலப்போட்டியும் இடம்பெற்றது.
நாம் காலத்தால் மறந்த சிறு தானியம், கூழ் உள்ளிட்ட தமிழர் உணவு முறைகள், கண்ணாடி வளையல், பம்பரம் போன்ற விளையாட்டு பொருட்கள், இன்றைய தலைமுறையினருக்கு காட்சிப்படுத்தப்பட்டன.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், பள்ளி மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், பார்வையாளர்களுக்கு விருந்து படைத்தன.
மாணவியரின் ஒற்றை சிலம்பம், இரட்டை சிலம்பம், ஒயிலாட்டம் என, பள்ளி மாணவ, மாணவியரின் அனைத்து நிகழ்ச்சிகளும் கைதட்டல் பெற்றது.
மியூசிக் சேர், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகளில் அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது திறமையையும், பலத்தையும் வெளிப்படுத்தினர்.
பெண் கவுன்சிலர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் நாட்டுப்புற பாடல்களுக்கு விசில் அடித்தவாறு குத்தாட்டம் போட்டது, விழாவை களைகட்ட செய்தது.