/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கஞ்சா, போதைப் பொருள் கடத்தல் காந்திபுரத்தில் போலீசார் சோதனை கஞ்சா, போதைப் பொருள் கடத்தல் காந்திபுரத்தில் போலீசார் சோதனை
கஞ்சா, போதைப் பொருள் கடத்தல் காந்திபுரத்தில் போலீசார் சோதனை
கஞ்சா, போதைப் பொருள் கடத்தல் காந்திபுரத்தில் போலீசார் சோதனை
கஞ்சா, போதைப் பொருள் கடத்தல் காந்திபுரத்தில் போலீசார் சோதனை
ADDED : ஜூன் 23, 2025 04:20 AM

கோவை: போதைப் பொருட்கள் கடத்தல், விற்பனையை தடுக்க காந்திபுரம் பகுதியில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாநகரில் போதை பொருட்கள், உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் குறித்து போலீசார் சோதனை நடத்தி கைது செய்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து கஞ்சா, போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்கின்றனர்.
இதுதவிர போலீசார் அடிக்கடி குழுக்கள் அமைத்து மாநகரில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் ஆகிய இடங்களில் திடீரென சோதனை மேற்கொள்கின்றனர்.
மேலும், மாநகர போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட மளிகை கடைகள், பெட்டி கடைகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களிலும் போதை பொருள் கடத்தி வருவதை தடுக்க போலீசார் திடீரென சோதனை செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நேற்று கோவை காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்ட், டவுன் பஸ் ஸ்டாண்ட்களில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பஸ் ஸ்டாண்ட்டில் உள்ள கடைகள், பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. பஸ்களில் இருந்த பயணிகளின் உடமைகளையும் போலீசார் சோதனை செய்தனர். சோதனையில், யாராவது கஞ்சா, குட்கா, போதை மாத்திரைகளை கடத்தப்படுகிறதா என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது.