/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்: நால்வரிடம் போலீசார் விசாரணை அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்: நால்வரிடம் போலீசார் விசாரணை
அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்: நால்வரிடம் போலீசார் விசாரணை
அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்: நால்வரிடம் போலீசார் விசாரணை
அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்: நால்வரிடம் போலீசார் விசாரணை
ADDED : ஜூன் 22, 2025 02:14 AM
கோவை: கோவை அரசு பஸ் டிரைவர் மகேந்திரன். இவர் காந்திபுரம் டவுன்பஸ் ஸ்டாண்ட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது பஸ் ஸ்டாண்ட்டுக்குள் நுழைந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. நிலைதடுமாறி கீழே விழுந்த மகேந்திரனை, அருகில் இருந்தவர்கள் மீட்டனர். காரில் இருந்து மதுபோதையில், இறங்கியவர்களிடம் மகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
வாக்கு வாதம் முற்றிய நிலையில், காரில் இருந்த நான்கு பேரும், மகேந்திரனை தாக்கினர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்து அங்கு வந்த காட்டூர் போலீசார், காரை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.