Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/போலீஸ் குடியிருப்பு; காணொலியில் திறப்பு!

போலீஸ் குடியிருப்பு; காணொலியில் திறப்பு!

போலீஸ் குடியிருப்பு; காணொலியில் திறப்பு!

போலீஸ் குடியிருப்பு; காணொலியில் திறப்பு!

ADDED : ஜன 04, 2024 09:03 PM


Google News
ஆனைமலை;ஆனைமலையில், போலீஸ் குடியிருப்பு கட்டடத்தைத தமிழக முதல்வர், காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

வால்பாறை உட்கோட்டத்தில், ஒரு டி.எஸ்.பி., இரண்டு இன்ஸ்பெக்டர்கள், 35 எஸ்.ஐ.,க்கள், சிறப்பு எஸ்.ஐ.,க்கள், 63 போலீசார் பணியாற்றுகின்றனர். அதில், ஆனைமலை போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் உள்பட, 10க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இந்த போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீசாருக்கு, கடந்த, 1965ம் ஆண்டு, 2.10 ஏக்கரில் போலீஸ் குடியிருப்பு கட்டப்பட்டது. எஸ்.ஐ., ஒருவர் உள்ளிட்ட, எட்டு போலீசாருக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன.

கட்டடம் கட்டப்பட்டு, 45 ஆண்டுகளானதால், மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இதையடுத்து, கடந்த, 2021ம் ஆண்டு போலீஸ் குடியிருப்பு இடிக்கப்பட்டு, நான்கு கோடியே, 69 லட்சம் ரூபாய் செலவில் புதிய குடியிருப்பு கட்டப்பட்டது.

இரண்டு சப் - இன்ஸ்பெக்டர்கள் மற்றும், 28 போலீசார் வசிக்கும் வகையில், இரண்டு படுக்கையறை, ஒரு சமையல் அறை, ஹால் உடன், கட்டப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று தமிழக முதல்வர் காணொலி வாயிலாக நேற்று புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.

எஸ்.பி., பத்ரிநாராயணன், குடியிருப்பு கட்டடத்தை பார்வையிட்டார். இன்ஸ்பெக்டர் குமார், எஸ்.ஐ.,க்கள் முருகானந்தம், பரமசிவம், வள்ளியம்மாள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

பொள்ளாச்சியில் விரைவில்!


எஸ்.பி., நிருபர்களிடம் கூறியதாவது:

ஆனைமலை போலீஸ் குடியிருப்பு கட்டடத்தை, முதல்வர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இது உள்ளூர் போலீசாருக்கு பயனாக இருக்கும்.

பொள்ளாச்சியில், போலீஸ் குடியிருப்பு கட்டடம், 300 குடியிருப்புகளுடன் கட்டுவதற்கான அனுமதி கிடைத்துள்ளது. விரைவில் பணிகள் துவங்கப்படும்.

கோவை மாவட்டத்தில், போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த, 2022ம் ஆண்டு, 60 கோடி அளவு போதை பொருட்கள் பறிமுதல் செய்துள்ளோம். கடந்தாண்டு, 785 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதை தடுக்க பள்ளி, கல்லுாரிகளில், 'ஆன்ட்டி டிரக் கிளப்' துவங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் வாயிலாக தகவல்கள் கூடுதலாக கிடைக்கின்றன. இந்த நடவடிக்கைகள் வாயிலாக, போதை பொருட்கள் புழக்கம் தடுக்கும் பணிகள் நடக்கின்றன.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us