/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஹெல்மெட் அணியாமல் வந்தவருக்கு போலீஸ் அடி ஹெல்மெட் அணியாமல் வந்தவருக்கு போலீஸ் அடி
ஹெல்மெட் அணியாமல் வந்தவருக்கு போலீஸ் அடி
ஹெல்மெட் அணியாமல் வந்தவருக்கு போலீஸ் அடி
ஹெல்மெட் அணியாமல் வந்தவருக்கு போலீஸ் அடி
ADDED : மே 30, 2025 12:27 AM
கோவை; திருச்சி சாலையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை போலீஸ்காரர் தாக்கியதால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
திருச்சி சாலை, அரசு மருத்துவமனை அருகில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவரை நிறுத்தினர். அவரிடம், ஆவணங்களை கேட்டபோது, மொபைலில் காட்டியுள்ளார்.
போலீசார் அசல் ஆவணங்களின், நகலை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர். இதனால், இளைஞர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைதொடர்ந்து, போலீசார் அவரிடம் இருந்து மொபைல் போனை வாங்க முயற்சித்தார்.
இளைஞர் அதை தடுக்க முயன்றபோது, தனது கையில் வைத்திருந்த தடியால் அடித்தார். இளைஞரின் மொபைல் கீழே விழுந்து சேதமடைந்தது.
''ஹெல்மெட் அணியாமல் வந்தால் அபராதம் போடுங்கள். அபராதம் விதிக்காமல் மொபைலை பறித்து, அடிப்பது சரியா,'' என கேள்வி எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.