/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் கண்டுகொள்ளாமல் போலீசார் வேடிக்கை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் கண்டுகொள்ளாமல் போலீசார் வேடிக்கை
போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் கண்டுகொள்ளாமல் போலீசார் வேடிக்கை
போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் கண்டுகொள்ளாமல் போலீசார் வேடிக்கை
போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் கண்டுகொள்ளாமல் போலீசார் வேடிக்கை
ADDED : ஜூன் 04, 2025 01:00 AM

கோவை, ; கோவை அரசு கல்லுாரி சாலையில், பள்ளி சுவற்றையொட்டி கார்களை வரிசையாக நிறுத்தி வைத்திருப்பதால், 'பீக் ஹவர்ஸில்' கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் இந்த வாகனங்களை அப்புறப்படுத்த, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பதே இல்லை.
அருகாமையில் பள்ளி உள்ளதால், காலை, மாலை நேரங்களில் இப்பகுதியில் கடும் வாகன நெருக்கடி ஏற்படுகிறது. தற்போது சிக்னல் முறை அகற்றப்பட்டு, 'யூ டேர்ன்' வசதி செய்திருப்பதால், வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
இப்பிரச்னைக்கு தீர்வு காண, போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தியுள்ள கார்களை, போக்குவரத்து போலீசார் அப்புறப்படுத்த வேண்டும்.
பள்ளிக்கு குழந்தைகளை வாகனங்களில் அழைத்து வரும் பெற்றோர், பள்ளி வளாகத்துக்குள் ஒரு கேட் வழியாகச் சென்று, இன்னொரு கேட் வழியாக வெளியே வரும் வகையில் ஏற்பாடு செய்தால், ரோட்டில் வாகன நெருக்கடி ஏற்படாது.
பள்ளி வளாகத்துக்குள் போதிய இட வசதியும் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் இந்நடைமுறை பின்பற்றப்பட்டது.
போக்குவரத்து மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மாறியதும், தற்போது பள்ளி வளாகத்துக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அதனால், பைக், ஸ்கூட்டர்கள், ஆட்டோக்கள், கார்கள் ரோட்டில், குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தப்படுகின்றன.
காலை நேரத்தில் பள்ளி நுழைவாயிலில், பெற்றோர் குழந்தையை இறக்கி விட்டு விட்டு, உடனே சென்று விடுவதால், அச்சமயத்தில் பெரிய அளவில் பிரச்னை எழுவதில்லை. வகுப்பு முடிந்து வரும்போது அழைத்துச் செல்வதற்கு, 10 நிமிடத்துக்கு முன் வரும் பெற்றோர் ரோட்டில் வாகனங்களை நிறுத்தி காத்திருக்கின்றனர்.
ஆட்டோக்களில் பயணிக்கும் அனைத்து குழந்தைகளும் வரும் வரை, ஆட்டோக்களும், வேன்களும் ரோட்டோரம் காத்திருக்கின்றன. போக்குவரத்து போலீசார், சாலை பாதுகாப்பு குழு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்து, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.