/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'பிளாஸ்டிக் இல்லாத கோவை சாத்தியம்' 'பிளாஸ்டிக் இல்லாத கோவை சாத்தியம்'
'பிளாஸ்டிக் இல்லாத கோவை சாத்தியம்'
'பிளாஸ்டிக் இல்லாத கோவை சாத்தியம்'
'பிளாஸ்டிக் இல்லாத கோவை சாத்தியம்'
ADDED : மே 26, 2025 05:30 AM
கோவை; கோவை மாநகராட்சி குடியிருப்போர் சங்கங்கள் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், குறிச்சி குளக்கரை பகுதியில் பிளாஸ்டிக் அகற்றும் பணி நடந்தது.
ராஜூ நகர், அன்னமநாயக்கர் தெரு பகுதியில் பேரணியாக சென்று பிளாஸ்டிக் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அங்குள்ள வீடுகளுக்கு சென்று பிளாஸ்டிக் குப்பை சேகரித்தனர். அன்னமநாயக்கர் வீதி, மின்நகர், பார்க் அவென்யூ, ராஜு நகர், ராஜகோபால் நகர்பகுதியில் உள்ள குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, பிளாஸ்டிக்இல்லாத கோவையை உருவாக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்தி கொண்டனர்.
குனியமுத்துார் குடியிருப்போர் சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் அப்துல் ஹக்கீம் கூறுகையில், ''மக்களும், தன்னார்வலர்களும் ஒன்று சேர்ந்து தொடர்ந்து விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டால், பிளாஸ்டிக் இல்லாத கோவை சாத்தியமே்,'' என்றார்.