/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குழாய் உடைப்பு விரைந்து சீரமைப்பு; 'தினமலர்' செய்தி எதிரொலி குழாய் உடைப்பு விரைந்து சீரமைப்பு; 'தினமலர்' செய்தி எதிரொலி
குழாய் உடைப்பு விரைந்து சீரமைப்பு; 'தினமலர்' செய்தி எதிரொலி
குழாய் உடைப்பு விரைந்து சீரமைப்பு; 'தினமலர்' செய்தி எதிரொலி
குழாய் உடைப்பு விரைந்து சீரமைப்பு; 'தினமலர்' செய்தி எதிரொலி
ADDED : மார் 25, 2025 09:34 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, வெங்கட்ரமணன் ரோட்டில், அதிக அழுத்தம் காரணமாக, பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு, விரைந்து சீரமைக்கப்பட்டது.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட வெங்கட்ரமணன் ரோட்டில், அதிக அழுத்தம் காரணமாக பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதிலிருந்து தண்ணீர் வெளியேறிய நிலையில், ரோட்டில் வழிந்தோடி வீணானது.
இதுகுறித்து, இரு தினங்களுக்கு முன், 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. குழி தோண்ட நெடுஞ்சாலை துறையினரிடம் அனுமதி பெற்று, நகராட்சி ஊழியர்கள், குழாய் உடைப்பை சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர். ஒரே நாளில், பணியை விரைந்து முடிந்து, வழக்கம்போல குடிநீர் வினியோகமும் துவங்கப்பட்டது. இதனால், மக்கள் நிம்மதி அடைந்தனர்.