ADDED : மே 22, 2025 12:29 AM

கோவை;கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது. சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் வித்யா தலைமை வகித்தார். வடக்கு தாலுகா தாசில்தார் விஜயரங்கபாண்டியன் முன்னிலை வகித்தார்.
பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் வித்யா, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நேற்று முன் தினம் நடந்த வருவாய் தீர்வாயத்தின் போது, கோரிக்கை மனுக்கள் வழங்கிய 3 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாறுதல்கள், 2 பயனாளிகளுக்கு வாரிசு சான்றிதழ்கள் வழங்கினார்.