/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இலவச வீட்டுமனை பட்டா கேட்டு குவிந்த மனுக்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு குவிந்த மனுக்கள்
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு குவிந்த மனுக்கள்
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு குவிந்த மனுக்கள்
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு குவிந்த மனுக்கள்
ADDED : மே 20, 2025 11:39 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் ஜமாபந்தி துவங்கியது. இதில், அதிகபட்சமாக இலவச வீட்டு மனை பட்டா கேட்டு, மக்கள் மனுக்கள் கொடுத்தனர்.
மேட்டுப்பாளையம் தாலுக்கா அலுவலகத்தில், நேற்று ஜமாபந்தி துவங்கியது. கோவை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கீதா பங்கேற்று, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
முதல் நாள் கெம்மாரம்பாளையம், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, காளம்பாளையம் ஆகிய நான்கு ஊராட்சிகளுக்கு ஜமாபந்தி நடந்தது. நான்கு ஊராட்சிகளில் மொத்தம், 75 கோரிக்கை மனுக்களை பொது மக்கள் கொடுத்தனர். இதில் அதிகபட்சமாக, இலவச வீட்டு மனை பட்டா கேட்டு, மக்கள் மனு கொடுத்து இருந்தனர். ஜமாபந்தியில், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ, செல்வராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமணன், தாசில்தார் ராமராஜ் உள்பட, பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இரண்டாவது நாளான இன்று, காரமடை, மருதூர், பெள்ளாதி, சிக்காரம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கும், 22ம் தேதி நெல்லித்துறை, ஓடந்துறை, தேக்கம்பட்டி, சிக்கதாசம்பாளையம், ஜடையம்பாளையம், சிறுமுகை ஆகிய ஊராட்சிகளுக்கும் ஜமாபந்தி நடைபெற உள்ளது.
23ம் தேதி இரும்பறை, இலுப்பநத்தம், சின்னக்கள்ளிப்பட்டி, முடுதுறை, பெள்ளேபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு ஜமாபந்தி நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் கோரிக்கை மனுவை ஜமாபந்தி அலுவலரிடம் கொடுத்து, தீர்வு பெறும்படி வருவாய்த்துறை துறையினர் தெரிவித்தனர்.