Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரோட்டை சீரமைத்து தர பி.டி.ஓ.விடம் மனு

ரோட்டை சீரமைத்து தர பி.டி.ஓ.விடம் மனு

ரோட்டை சீரமைத்து தர பி.டி.ஓ.விடம் மனு

ரோட்டை சீரமைத்து தர பி.டி.ஓ.விடம் மனு

ADDED : செப் 26, 2025 05:19 AM


Google News
கிணத்துக்கடவு; கிராமப்புற ரோடு சேதமடைவதால் அதை சீரமைத்து தரக்கோரி மக்கள் சார்பில், பி.டி.ஓ., விடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கிணத்துக்கடவு, கவியரசு என்பவர் கிணத்துக்கடவு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தார்.

மனுவில், சங்கராயபுரம் பிரிவு முதல் கல்லுக்குழி வரை உள்ள தார் ரோட்டில் அதிக அளவு விவசாயிகள் செல்கின்றனர். இந்த ரோடு சீரமைப்பு செய்யப்பட்டு, 13 ஆண்டுகள் ஆகிறது.

மேலும், இந்த ரோட்டில் விவசாயிகள் சென்று வர பெரும் சிரமம் ஏற்படுகிறது. இது மட்டுமின்றி இப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு, தினசரி பெரிய அளவிலான கனரக வாகனங்களில், அதிக பாரம் ஏற்றி செல்வதால், இந்த தார் ரோடு கூடுதலாக சேதம் அடைகிறது.

எனவே, இந்த ரோட்டை விரைவில் சீரமைப்பு செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us