/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கைதியிடம் பயங்கரவாத கொடி 'கஸ்டடி' கோரிய மனு ஒத்திவைப்புகைதியிடம் பயங்கரவாத கொடி 'கஸ்டடி' கோரிய மனு ஒத்திவைப்பு
கைதியிடம் பயங்கரவாத கொடி 'கஸ்டடி' கோரிய மனு ஒத்திவைப்பு
கைதியிடம் பயங்கரவாத கொடி 'கஸ்டடி' கோரிய மனு ஒத்திவைப்பு
கைதியிடம் பயங்கரவாத கொடி 'கஸ்டடி' கோரிய மனு ஒத்திவைப்பு
ADDED : ஜன 13, 2024 01:26 AM
கோவை;சிறைக்குள் பயங்கரவாத கொடி, பதுக்கிய கைதியை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
கோவை மத்திய சிறையில், விசாரணை கைதிகள் அறையில் சோதனை நடத்திய போது, என்.ஐ.ஏ., வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஈரோட்டை சேர்ந்த ஆசிப் முஸ்தகீன், பேன்ட்ஸ் பாக்கெட்டில், காகிதத்தில் வரையப்பட்ட பயங்கரவாத அமைப்பின் கொடி வைத்திருந்தது தெரிய வந்தது. கொடியை பறிமுதல் செய்த போது, சிறை அலுவலர்களுக்கு ஆசிப் முஸ்தகீன் மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆசிப் முஸ்தகீன் மீது, உபா சட்டம் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ், ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அவரை 'போலீஸ் கஸ்டடி' யில் விசாரிக்க அனுமதி கோரி, கோவை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆசிப் முஸ்தகீன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அதை தொடர்ந்து, மனு மீதான விசாரணையை, வரும் 19க்கு ஒத்திவைத்து நீதிபதி விஜயா உத்தரவிட்டார்.