/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பொள்ளாச்சி பாலியல் வழக்கு இழப்பீடு தொகை கேட்டு மனு பொள்ளாச்சி பாலியல் வழக்கு இழப்பீடு தொகை கேட்டு மனு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு இழப்பீடு தொகை கேட்டு மனு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு இழப்பீடு தொகை கேட்டு மனு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு இழப்பீடு தொகை கேட்டு மனு
ADDED : மே 18, 2025 04:42 AM
கோவை : கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பெண்கள் மற்றும் மாணவிகள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், ஒன்பது குற்ற வாளிகளுக்கு, சாகும் வரை ஆயுள்சிறை விதித்து, கோவை மகளிர் கோர்ட், கடந்த 13-ம் தேதி தீர்ப்பளித்தது.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, அரசு தரப்பில் மொத்தம் 85 லட்சம் ரூபாய், இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட்டது. இழப்பீட்டு தொகையை பெற, பாதிக்கப்பட்ட பெண்கள், கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில், மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து, சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான வக்கீல் சுரேந்திர மோகன் கூறியதாவது:
இழப்பீட்டு தொகை, 85 லட்சம் ரூபாயை ஏழு பெண்களுக்கு பிரித்து வழங்க, கோர்ட் உத்தரவிட்டது. இருவர் இழப்பீட்டு தொகைக்கு விண்ணப்பித்துள்ளனர். ஏழு பேரும் விண்ணப்பித்த பிறகு, அரசிடமிருந்து இழப்பீட்டு தொகை பெற்று வழங்கப்படும்.
இதற்கிடையில் பாதிக்கப்பட்ட , எட்டு பெண்களுக்கும், கூடுதலாக தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க, தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்த தொகையும், அரசிடமிருந்து பெற்று வழங்கப்படும். இந்த வழக்கில், புகார் கொடுத்த மாணவியிடம், குற்றவாளிகள் பறித்து சென்ற நகை, சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகம் வாயிலாக , நேற்று ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.