ADDED : செப் 04, 2025 11:22 PM
தொண்டாமுத்துார் ; போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலையில், கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
கடந்த மாத இறுதியில், மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழை காரணமாக, கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. பாதுகாப்பு கருதி, கடந்த மாதம், 28 முதல் சுற்றுலா பயணிகள் வருகைக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். தற்போது நீர்வரத்து சீரானதால், இன்று (செப்.,5) முதல் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.