/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குப்பை பிரச்னைக்கு தேவை தீர்வு குறைதீர் கூட்டத்தில் மக்கள் மனு குப்பை பிரச்னைக்கு தேவை தீர்வு குறைதீர் கூட்டத்தில் மக்கள் மனு
குப்பை பிரச்னைக்கு தேவை தீர்வு குறைதீர் கூட்டத்தில் மக்கள் மனு
குப்பை பிரச்னைக்கு தேவை தீர்வு குறைதீர் கூட்டத்தில் மக்கள் மனு
குப்பை பிரச்னைக்கு தேவை தீர்வு குறைதீர் கூட்டத்தில் மக்கள் மனு
ADDED : மே 21, 2025 12:26 AM

கோவை, ; மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம், மேயர் ரங்கநாயகி தலைமையிலும், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும் நேற்று நடந்தது.
இதில், பிறப்பு, சொத்து வரி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சார்ந்து, கிழக்கு மண்டலத்தில் ஆறு மனுக்கள், மேற்கில், 14 மனுக்கள், வடக்கில், 18, தெற்கில், 9, மத்திய மண்டலத்தில், 12 மனுக்கள் உட்பட, 65 மனுக்களை மக்கள் அளித்தனர்.
ராஜகோபால் நகர் குடியிருப்பு சங்கத்தினர் அளித்த மனுவில்,'குனியமுத்துார்,87வது வார்டுக்கு உட்பட்ட, 11 சங்கங்களின் கூட்டமைப்பான அன்னமா நாயக்கர் வீதி, ஒருங்கிணைந்தசங்கத்திற்குட்பட்டபகுதிகளில் குப்பை, சரியாக அகற்றப்படுவதில்லை.
இதனால், பொது மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. துாய்மை பணிகளுக்கான உபகரணங்களும், நவீனப்படுத்தப்படாமல்உள்ளன.
பல முறை மனு அளித்தும், இதுவரை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை. போர்க்கால அடிப்படையில் இப்பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, துறை சார்ந்த அலுவலர்கள், உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.