/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தண்ணீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மறியல்தண்ணீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மறியல்
தண்ணீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மறியல்
தண்ணீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மறியல்
தண்ணீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மறியல்
ADDED : பிப் 24, 2024 10:12 PM

கோவை;தண்ணீர் கேட்டு, சுங்கம் சந்திப்பில், காலிக்குடங்களுடன் பொதுமக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகராட்சி பகுதியில், பில்லுார் அணையில் இருந்து நீர் வரத்து குறைய ஆரம்பித்திருப்பதால், 10 முதல், 15 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வழங்கப்படுகிறது.
மத்திய மண்டலம், 64வது வார்டு, ராமநாத புரம் அருகே ஆரியன் சோப்பு காலனி வீதிக்கு, 15 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இவ்வீதியில், 500 வீடுகள் உள்ளன.
மேலும், கடந்த இரு ஆண்டுகளாக போர்வெல் தண்ணீர் சப்ளை செய்யாததால், அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், முன்னாள் கவுன்சிலர் ராஜன் தலைமையில் அப்பகுதி பெண்கள், காலிக்குடங்களுடன் சுங்கம் சந்திப்பு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், உதவி பொறியாளர் பாலசந்தர் ஆகியோர் பேச்சு நடத்தினர். பின், வீதிக்கு வந்து தண்ணீர் பிரச்னை தொடர்பாக, மக்களிடம் கேட்டறிந்தனர்.
இரு ஆண்டுகளாக போர்வெல் பராமரிப்பு இன்றி இருக்கிறது; இதற்கு முன் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் போர்வெல் தண்ணீர் தரப்பட்டது.
மோட்டார் ரிப்பேர் என கூறி, சப்பை தண்ணீர் சப்ளை செய்யாமல் இருப்பதாக மக்கள் கூறினர்.
அருகாமையில் உள்ள வேறு போர்வெல்களில் இருந்து இணைப்பு கொடுத்து விரைந்து தண்ணீர் தருவதாகவும், ஒரு வாரத்துக்குள் பழுதடைந்த போர்வெல் சீரமைக்கப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.