/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அகற்றப்படாத குப்பை அதிருப்தியில் மக்கள்அகற்றப்படாத குப்பை அதிருப்தியில் மக்கள்
அகற்றப்படாத குப்பை அதிருப்தியில் மக்கள்
அகற்றப்படாத குப்பை அதிருப்தியில் மக்கள்
அகற்றப்படாத குப்பை அதிருப்தியில் மக்கள்
ADDED : ஜன 05, 2024 11:25 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி - கோவை ரோட்டில் அமைந்துள்ள பொள்ளாச்சி (தெற்கு) ஒன்றிய அலுவலக வளாகத்தின் அருகே, குப்பை குவிந்துள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி - கோவை ரோட்டில் உள்ள அம்மா திருமண மண்டபம் தற்போது, பொள்ளாச்சி (தெற்கு) ஊராட்சி ஒன்றிய அலுவலகமாக செயல்படுகிறது. இந்த ரோட்டில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் மக்கள் பயணிக்கின்றனர்.
இந்த வளாகத்தின் உள்பகுதியில் மரங்கள் சாய்ந்து, செடிகள் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது. மேலும், இந்த வளாகத்தின் வெளிப்பகுதியில் ரோட்டோரம் அதிகளவு குப்பை குவிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு பொதுச்சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
குப்பையை அகற்ற அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்காததால், மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இப்பகுதியில் குவிக்கப்பட்ட குப்பையை அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தியுள்ளனர்.