/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரயில்வே கேட் முன்னறிவிப்பின்றி மூடப்பட்டதால் மக்கள் அதிருப்தி ரயில்வே கேட் முன்னறிவிப்பின்றி மூடப்பட்டதால் மக்கள் அதிருப்தி
ரயில்வே கேட் முன்னறிவிப்பின்றி மூடப்பட்டதால் மக்கள் அதிருப்தி
ரயில்வே கேட் முன்னறிவிப்பின்றி மூடப்பட்டதால் மக்கள் அதிருப்தி
ரயில்வே கேட் முன்னறிவிப்பின்றி மூடப்பட்டதால் மக்கள் அதிருப்தி
ADDED : செப் 15, 2025 09:20 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, வடுகபாளையம் ரயில்வே கேட் முன்னறிவிப்பின்றி பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
பொள்ளாச்சி, நகராட்சி வடுகபாளையம் செல்வகுமார் விஸ்தரிப்பு வீதியில், ரயில்வே கேட் செயல்படுகிறது. வடுகபாளையம் பகுதியில் வசிக்கும் மக்கள், இந்த ரயில்வே கேட்டை பல ஆண்டுகளாக பயன் படுத்தி வருகின்றனர்.
மேலும், கோவையில் இருந்து வடுகபாளையம் செல்வோரும், சி.டி.சி., மேடு வழியாக ரயில்வே கேட்டை கடந்து செல்கின்றனர். பள்ளி, கல்லுாரி மணவர்கள், துாய்மை பணியாளர்கள் இவ்வழித்தடத்தை பயன்படுத்துகின்றனர்.
கடந்தாண்டு ஜூலை மாதம் வடுகபாளையம் ரயில்வே கேட் (எல்சி 123) மூடப்பட்டது. இதையடுத்து அரசியல் கட்சியினர், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ரயில்வே கேட் மீண்டும் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
இந்நிலையில் பராமரிப்பு பணிகளுக்காக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரயில்வே கேட் மூடப்பட்டது. இதனால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கவுன்சிலர் உமா மகேஸ்வரி, சப் - கலெக்டர் அலுவலகத்தில் இது குறித்து மனு கொடுத்தார்.
அவர், கூறுகையில், ''வடுகபாளையம் ரயில்வே கேட், கடந்த, 13ம் தேதி முன்னறிவிப்பு இன்றி மூடப்பட்டது. பராமரிப்பு பணிகளுக்காக மூடினாலும் முறையாக தெரிவிக்காததால் மக்கள் சிரமப்படுகின்றனர். உடனடியாக ரயில்வே கேட்டை திறக்க வேண்டும்,'' என்றார்.