/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரோட்டில் செப்டிக்டேங்க் குழி துர்நாற்றத்தால் மக்கள் அவதிரோட்டில் செப்டிக்டேங்க் குழி துர்நாற்றத்தால் மக்கள் அவதி
ரோட்டில் செப்டிக்டேங்க் குழி துர்நாற்றத்தால் மக்கள் அவதி
ரோட்டில் செப்டிக்டேங்க் குழி துர்நாற்றத்தால் மக்கள் அவதி
ரோட்டில் செப்டிக்டேங்க் குழி துர்நாற்றத்தால் மக்கள் அவதி
ADDED : ஜன 25, 2024 12:02 AM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, தாமரைக்குளத்தில் ஊராட்சி ரோட்டில் தனியார் செப்டிக்டேங்க் தோண்டியதால்பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவுக்கு உட்பட்ட நல்லட்டிபாளையம் ஊராட்சி, தாமரைக்குளம் வீரப்பன் நகர் பகுதியில், 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில், முதல் தெருவில் ஊராட்சி சார்பில், 23 அடி ரோடு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனியார் வீட்டின் முன் ஊராட்சி ரோட்டில், 10 அடிக்கு செப்டிக்டேங்க் அமைத்து கழிவுகளை அகற்ற வீட்டின் உரிமையாளர் குழி தோண்டி உள்ளார்.
இதனால் அப்பகுதி மக்கள், அவரிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும், ஊராட்சி நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற்று தான் குழி அமைக்கப்பட்டுள்ளது என, தெரிவித்துள்ளார். இதனால், ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் மக்கள் புகார் தெரிவித்தனர்.
மக்கள் கூறியதாவது:
தனியார் இடத்தில் இருந்து, வெளியேற்றப்படும் கழிவுநீர் ரோட்டில் திறந்தவெளியில் சென்று கொண்டிருந்தது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. தனி நபர் ஒருவர் ரோட்டை ஆக்கிரமித்து செப்டிக்டேங்க் கட்டியுள்ளதால், அப்பகுதி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, ஒரே நாளில் குழியை மூட வேண்டும் என தெரிவித்தனர். ஆனால், தற்போது வரை செப்டிங்டேங்க் குழி மூடப்படாமல் உள்ளது.
இவ்வாறு, கூறினர்.
ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'தாமரைக்குளத்தில் தனியார் ஒருவர் ரோட்டில் ரோட்டில் அமைத்துள்ள செப்டிக்குழியை மூடாவிட்டால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.