/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயன் பெற முடிவதில்லை: பென்ஷனர்கள் புகார்மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயன் பெற முடிவதில்லை: பென்ஷனர்கள் புகார்
மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயன் பெற முடிவதில்லை: பென்ஷனர்கள் புகார்
மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயன் பெற முடிவதில்லை: பென்ஷனர்கள் புகார்
மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயன் பெற முடிவதில்லை: பென்ஷனர்கள் புகார்
ADDED : ஜன 07, 2024 09:10 PM

அன்னுார்;'மருத்துவ காப்பீடு திட்டத்தில், பென்ஷனர்கள் பயன்பெற முடிவதில்லை,' என பென்ஷனர் கூட்டமைப்பு கூட்டத்தில் சரமாரியாக புகார் தெரிவிக்கப்பட்டது.
அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு சார்பில், பென்ஷனர் தின விழா அன்னுாரில் நேற்று நடந்தது. வட்டாரத் தலைவர் நடராஜன் வரவேற்றார். பொருளாளர் நடராஜன் முன்னிலை வகித்தார்.
கூட்டமைப்பின் மாநில தலைவர் ராஜண்ணன், பென்சனர்களின் கோரிக்கை, பிற மாநிலங்களில் பென்ஷனர்களின் நிலை, மத்திய அரசு, மாநில அரசு பென்சனர்களுக்கு கிடைக்கும் பயன்களில் உள்ள வேறுபாடு குறித்து பேசினார். இதை தொடர்ந்து நிர்வாகிகள் பேசுகையில், 'பென்சனர்கள் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயன்பெற முடிவதில்லை. பலமுறை அலைந்தாலும் சிகிச்சை செய்யப்பட்ட செலவு தொகையை திரும்ப பெற முடிவதில்லை. முழுமையான மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., உறுதியளித்தபடி புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயதுக்கு மேற்பட்ட பென்ஷனர்களுக்கு 10 சதவீதம், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 20 சதவீதம் பென்ஷன் தொகையை உயர்த்தி தர வேண்டும். குடும்ப பென்ஷன் வழங்க தாமதம் செய்து பென்சன்தாரர்களை அலைக்கழிக்கின்றனர்,' என புகார் தெரிவித்தனர்.
கூட்டத்தில் வட்டார செயலாளர் பொன்னுச்சாமி, ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் வேலுச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.