/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சென்னையில் வரும் 31ல் காத்திருப்பு போராட்டம்: மக்கள் நல பணியாளர்கள் அறிவிப்புசென்னையில் வரும் 31ல் காத்திருப்பு போராட்டம்: மக்கள் நல பணியாளர்கள் அறிவிப்பு
சென்னையில் வரும் 31ல் காத்திருப்பு போராட்டம்: மக்கள் நல பணியாளர்கள் அறிவிப்பு
சென்னையில் வரும் 31ல் காத்திருப்பு போராட்டம்: மக்கள் நல பணியாளர்கள் அறிவிப்பு
சென்னையில் வரும் 31ல் காத்திருப்பு போராட்டம்: மக்கள் நல பணியாளர்கள் அறிவிப்பு
ADDED : ஜன 29, 2024 12:53 AM
பொள்ளாச்சி:''பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 31ம் தேதி சென்னையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்,'' என தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் செல்லபாண்டியன் தெரிவித்தார்.
தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் செல்லப்பாண்டியன், பொள்ளாச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:
மக்கள் நலப்பணியாளர்களை, கடந்த, 1989 - 90ம் ஆண்டு தி.மு.க., அரசு நியமனம் செய்தது. கடந்த, 34 ஆண்டுகளில் மூன்று முறை பணி நீக்கம் செய்யப்பட்டோம்.
தற்போது, தேர்தல் அறிக்கையில் கூறியது போன்று, தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் வாய்மொழி உத்தரவாக, மக்கள் நலப்பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
மக்கள் நலப்பணியாளர்களுக்கு ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, காலமுறை ஊதியத்துடன், பணி வரன் முறையுடன் பணி நிரந்தரத்திற்கான அரசாணை வழங்கிட வேண்டும்.
இறந்து போன ஓய்வு பெற்ற பணியாளர்கள் குடும்பங்களுக்கு, தேர்தல் அறிக்கையில் கூறியது போன்று, ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணத்தொகையும், வாரிசுகளுக்கு வேலையும் வழங்கிட வேண்டும்.
அதே போன்று ஓய்வு பெற்ற குடும்பங்களுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் மற்றும் வாரிசுகளுக்கு வேலை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 31ம் தேதி சென்னையில் காத்திருக்கும் போராட்டம் நடத்தப்படும். தமிழக முதல்வரிடம் இருந்து, பணி நிரந்தரம் பெற்று திரும்புவது என, போராட்டத்தின் வாயிலாக முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, செல்லபாண்டியன் தெரிவித்தார்.