/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நடைபாதை சீரமைப்பு; பொதுமக்கள் மகிழ்ச்சி நடைபாதை சீரமைப்பு; பொதுமக்கள் மகிழ்ச்சி
நடைபாதை சீரமைப்பு; பொதுமக்கள் மகிழ்ச்சி
நடைபாதை சீரமைப்பு; பொதுமக்கள் மகிழ்ச்சி
நடைபாதை சீரமைப்பு; பொதுமக்கள் மகிழ்ச்சி
ADDED : ஜன 08, 2024 12:05 AM

வால்பாறை;வால்பாறையில், 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, நடைபாதை சீரமைக்கப்பட்டது.
வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட, 10வது வார்டில், கக்கன் காலனி, அண்ணா நகர், கலைஞர் நகர், சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த வார்டில், பல இடங்களில் மக்கள் நடந்து செல்லும் நடைபாதை இடிந்த நிலையில் காணப்படுகிறது.
பல்வேறு இடங்களில் தடுப்புச்சுவரும் கட்டப்படவில்லை. இதனால், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக, வால்பாறை நகர் பள்ளி வாசல் செல்லும் நடைபாதை இடிந்த நிலையில் உள்ளதாக 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதனையடுத்து, நகராட்சி சார்பில் கரடு, முரடாக இருந்த நடைபதை சீரமைக்கப்பட்டது. 'தினமலர்' செய்தியால் நடைபாதை சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.