/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இருக்கை வசதியின்றி திணறும் பயணியர்; நகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கைஇருக்கை வசதியின்றி திணறும் பயணியர்; நகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இருக்கை வசதியின்றி திணறும் பயணியர்; நகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இருக்கை வசதியின்றி திணறும் பயணியர்; நகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இருக்கை வசதியின்றி திணறும் பயணியர்; நகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ADDED : ஜன 03, 2024 11:51 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்டில், போதிய இருக்கை வசதியில்லாததால், பயணியர் தரையில் அமர்ந்து காத்திருக்கும் அவல நிலை உள்ளது.
பொள்ளாச்சி நகராட்சியில், பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட்கள் உள்ளன. அதில், புதிய பஸ் ஸ்டாண்டில், கிராமப்புறங்கள், கேரளா மாநிலத்துக்கு செல்லும் பஸ்கள் வந்து செல்கின்றன.
இந்நிலையில், இங்கு போதிய இருக்கை வசதியில்லாததால் பயணியர் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
புதிய பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணியர் அமருவதற்காக அமைக்கப்பட்ட இருக்கைகள் போதுமான அளவில் இல்லை. அங்குள்ள இருக்கைகளும் கடைகளும், யாசகம் கேட்போரும் ஆக்கிரமித்து கொள்கின்றனர்.
இதுபோன்ற பிரச்னைகளால், மக்கள் அமர முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
புது பஸ் ஸ்டாண்டில் பயணியருக்கான வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது. அதில், இருக்கை வசதியில்லாததால், பஸ் நிறுத்தப்பகுதி அருகே உள்ள படிக்கட்டுகள், தரை பகுதி மற்றும் நிழலான இடங்களில் அமர்ந்து காத்திருக்கின்றனர். வயதானோர், கர்ப்பிணிகள் உள்ளிட்ட பலரும் கீழே அமர முடியாமல் கால் கடுக்க காத்திருக்கின்றனர்.
இந்நிலை மாற உரிய இருக்கை வசதி ஏற்படுத்தி தர, பலமுறை கோரிக்கை விடுத்தும் நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பஸ் ஸ்டாண்டில் இருக்கை வசதி உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.