/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தி.மு.க. விழாவுக்கு சென்ற பஸ்களால் பயணிகள், மாணவர்கள் தவியாய் தவிப்பு தி.மு.க. விழாவுக்கு சென்ற பஸ்களால் பயணிகள், மாணவர்கள் தவியாய் தவிப்பு
தி.மு.க. விழாவுக்கு சென்ற பஸ்களால் பயணிகள், மாணவர்கள் தவியாய் தவிப்பு
தி.மு.க. விழாவுக்கு சென்ற பஸ்களால் பயணிகள், மாணவர்கள் தவியாய் தவிப்பு
தி.மு.க. விழாவுக்கு சென்ற பஸ்களால் பயணிகள், மாணவர்கள் தவியாய் தவிப்பு
ADDED : செப் 17, 2025 10:51 PM

கோவை; தி.மு.க., முப்பெரும் விழாவுக்கு அரசு, தனியார் பஸ்கள் சென்றதால், கோவையில் பயணிகள், மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.
தி.மு.க., முப்பெரும் விழா, கரூரில் நேற்று நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்காக, அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்த தனியார் பஸ்களில், ஏராளமான தொண்டர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
பெரும்பாலான தனியார் பஸ்கள் விழாவுக்கு சென்றதால், கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் இன்றி, பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
குறிப்பாக, திருப்பூர், அவிநாசி, பல்லடம், தாராபுரம், புன்செய் புளியம்பட்டி ஆகிய வெளியூர் பஸ்களும், அன்னுார், சோமனுார், சூலுார் செல்லும் டவுன்பஸ்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தன. அப்பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
பஸ்கள் பற்றாக்குறை காரணமாக வடகோவை, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் வழக்கமான நேரத்துக்கு முன்கூட்டியே, மாணவர்களை வீட்டுக்கு அனுப்பினர். இவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பஸ் நிறுத்தங்களில் காத்து நின்றனர். கிடைத்த ஓரிரு பஸ்களில் சிரமப்பட்டு ஏறிச்சென்றனர்.