/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'பெற்றோரை போற்றி பாதுகாக்க வேண்டும்' 'பெற்றோரை போற்றி பாதுகாக்க வேண்டும்'
'பெற்றோரை போற்றி பாதுகாக்க வேண்டும்'
'பெற்றோரை போற்றி பாதுகாக்க வேண்டும்'
'பெற்றோரை போற்றி பாதுகாக்க வேண்டும்'
ADDED : ஜூன் 15, 2025 10:28 PM
கோவை; ''இன்றைய இளைஞர்கள் பெற்றோரை போற்றி பாதுகாக்க வேண்டும்,'' என்று கோதண்டராமர் கோவிலில் நடந்த, வில்லிபாரத சொற்பொழிவில் திருச்சி கல்யாணராமன் பேசினார்.
ராம்நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில், நேற்று காலை நடந்த வில்லிபாரத சொற்பொழிவில், காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வான் திருச்சி கல்யாணராமன் சொற்பொழிவாற்றியதாவது:
பூமியை காட்டிலும் கனமானவள் தாய். நம்மை பெற்று சீராட்டி, பாராட்டி வளர்க்கிறாள். நம்மிடம் எந்த குறையும் அவர் காணவில்லை. அப்படிப்பட்ட பெற்றோரை நமக்கு கடவுள் கொடுத்துள்ளார். அதனால், நாம் தாய், தந்தையரை பேணி காக்க வேண்டும். தந்தை என்பவர், ஆகாயத்தை விட உயர்ந்தவர். பெற்றோரை நாம் மறக்கக்கூடாது. வயதான பெற்றோரை இளைஞர்கள் போற்றி பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மாலை 6:30 மணிக்கு, 'நச்சுப்பொய்கை' என்ற தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது.