/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/'சிறார் குற்றங்களை தடுக்க பெற்றோர் அறிவுரை தேவை''சிறார் குற்றங்களை தடுக்க பெற்றோர் அறிவுரை தேவை'
'சிறார் குற்றங்களை தடுக்க பெற்றோர் அறிவுரை தேவை'
'சிறார் குற்றங்களை தடுக்க பெற்றோர் அறிவுரை தேவை'
'சிறார் குற்றங்களை தடுக்க பெற்றோர் அறிவுரை தேவை'
ADDED : பிப் 23, 2024 10:31 PM
கோவை:'சிறார்கள் குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்க, பெற்றோர் அறிவுரை கூறி வளர்க்க வேண்டும்' என, ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கோவை ஒண்டிப்புதூரில், கடந்த சில நாட்களுக்கு முன், 18 வயது சிறுவன், மற்றொரு சிறுவனால் கொலை செய்யப்பட்டான். இக்கொலை வழக்கில் கைதான சிறுவன், சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டான்.
இந்நிலையில், சிறுவர்கள் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த, ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில், குற்றங்களில் ஈடுபட்ட சிறுவர்கள் மற்றும் பெற்றோர்கள், தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
''சிறுவர்கள் குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்க, பெற்றோர்கள் உரிய அறிவுரைகள் கூறி வளர்க்க வேண்டும். ஆதரவற்ற சிறுவர்கள் கல்வி கற்க முடியாமல் இருந்தால், தன்னார்வ அமைப்பு வாயிலாக கல்வி கற்க வழிவகை செய்யப்படும்,'' என்றார் கமிஷனர் பாலகிருஷ்ணன்.
இக்கூட்டத்தில், சிறுவர்களுக்கு உள்ள பிரச்னைகள், தேவைப்படும் உதவிகள் குறித்து கருத்துக்கள் சேகரிக்கப்பட்டன.