/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வெளிநாடுகளுக்கு தபால் வாயிலாக பார்சல் சேவைவெளிநாடுகளுக்கு தபால் வாயிலாக பார்சல் சேவை
வெளிநாடுகளுக்கு தபால் வாயிலாக பார்சல் சேவை
வெளிநாடுகளுக்கு தபால் வாயிலாக பார்சல் சேவை
வெளிநாடுகளுக்கு தபால் வாயிலாக பார்சல் சேவை
ADDED : ஜன 30, 2024 11:44 PM
பொள்ளாச்சி;'பொள்ளாச்சி தபால் அலுவலகத்தில் இருந்து, குறைந்த செலவில் வெளிநாடுகளுக்கு பார்சல்களை அனுப்பலாம்,' என, பொள்ளாச்சி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்தார்.
பொள்ளாச்சி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் ஜெயசீலன் வெளியிட்ட அறிக்கை:
பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தபால் நிலையங்கள், வெளிநாடுகளுக்கு பார்சல்களை அனுப்பும் சேவையை வழங்குகிறது.
யார் வேண்டுமெனாலும், 20 கிராம் முதல் அதிகபட்சம், 35 கிலோ கிராம் வரை மிக குறைந்த கட்டணத்தில் பார்சல்களை அனுப்பலாம்.
வாடிக்கையாளர்கள், தபால் நிலையங்கள் வாயிலாக, 219 நாடுகளுக்கு பார்சல்களை அனுப்பலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வாடிக்கையாளர்கள் முன்வர வேண்டும்.
மேலும், தகவல் மற்றும் உதவிக்கு வாடிக்கையாளர்கள், விற்பனை பிரதிநிதி கார்த்திக்கை, 90809 17319 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது அருகில் உள்ள தபால் நிலையங்களுக்கு செல்லலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.