/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/டாடா தொழில்நுட்ப போட்டியில் பண்ணாரி அம்மனுக்கு முதலிடம்டாடா தொழில்நுட்ப போட்டியில் பண்ணாரி அம்மனுக்கு முதலிடம்
டாடா தொழில்நுட்ப போட்டியில் பண்ணாரி அம்மனுக்கு முதலிடம்
டாடா தொழில்நுட்ப போட்டியில் பண்ணாரி அம்மனுக்கு முதலிடம்
டாடா தொழில்நுட்ப போட்டியில் பண்ணாரி அம்மனுக்கு முதலிடம்
ADDED : ஜன 31, 2024 12:47 AM
கோவை;டாடா டெக்னாலஜிஸ், 'இன்னோவென்ட்' என்ற தலைப்பில், தேசிய அளவிலான திட்ட வடிவமைப்பு போட்டியை நடத்தியது.
இதில், உற்பத்தித் துறையின் எதிர்கொள்ளும் சவால்களுக்கு, இளம் பொறியியல் மாணவர்கள் தங்கள் படைப்பாற்றல் மூலம் புதுமையான தீர்வுகளை வழங்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
நாடு முழுவதிலுமிருந்து, 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். பலகட்ட சுற்றுகளுக்கு பிறகு, புனேவின் ஹிஞ்சேவாடியில் உள்ள டாடா டெக்னாலஜிஸ் தலைமையகத்தில் இறுதிப் போட்டி நடந்தது.
இதில், பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லுாரியின் 'ரோலெக்ஸ்' அணியில் மனோஜ்குமார், சுடர்முஹி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவர்களின், கார் வடிவமைப்பிற்கான ஜெனரேட்டிவ் ஏ.ஐ., ஆட்டோமோட்டிவ் ஸ்டைலைங் கண்டுபிடிப்பிற்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புக்கு, ரூ.3 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தில், இன்டர்ன்சிப் வாய்ப்பினையும் வெற்றி பெற்ற மாணவர்கள் பெற்றுள்ளனர்.