/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் சஸ்பெண்ட் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் சஸ்பெண்ட்
லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் சஸ்பெண்ட்
லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் சஸ்பெண்ட்
லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் சஸ்பெண்ட்
ADDED : செப் 12, 2025 07:40 AM
அன்னுார்; லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட ஊராட்சி செயலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம், கொண்டையம் பாளையம் ஊராட்சி செயலாளர் முத்துசாமி, 48. கோட்டைப்பாளையத்தை சேர்ந்தவர் விக்ரம் ராஜ், 42. காகிதப்பை தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தனது மனைவிக்கு சொந்தமான வீட்டு மனையை வரன்முறைப்படுத்த, கொண்டையம்பாளையம் ஊராட்சியில் விண்ணப்பித்தார். அப்போது ஊராட்சி செயலர் முத்துசாமி பேரம் பேசி, பத்தாயிரம் ரூபாய் தரும்படி கேட்டார்.
விக்ரம் ராஜா ரசாயனம் தடவிய பத்தாயிரம் ரூபாய் பணத்தை முத்துசாமியிடம் தரும்போது லஞ்ச ஒழிப்பு துறையினர் மறைந்திருந்து முத்துசாமியை கையும் களவுமாக பிடித்தனர்.
நேற்று முன் தினம் மதியம் கைது செய்யப்பட்ட முத்துசாமியிடம் நள்ளிரவு வரை வாக்குமூலம் பெறப்பட்டது. பின்னர் நேற்று காலை 10:30 மணிக்கு, கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஊராட்சி செயலர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, ஊரக வளர்ச்சி துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு நகல்கள் அனுப்பப்பட்டன.
இதைத் தொடர்ந்து எஸ்.எஸ்.குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பிறப்பித்துள்ள உத்தரவில்,' ஊராட்சி செயலர் முத்துசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.