ADDED : பிப் 24, 2024 12:44 AM
போத்தனூர்;மலுமிச்சம்பட்டி ஊராட்சியின், 6வது வார்டில் கணபதி நகர் உள்ளது. இங்கு இதர பயன்பாட்டிற்கான ஆழ்குழாய் கிணற்று நீர் எட்டு நாட்களாகியும் வினியோகம் செய்யப்படவில்லை.
இதையடுத்து நேற்று காலை ஆண், பெண்கள் என, 40 பேர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தலைவர், துணை தலைவர் ஆகியோரிடம் முறையிட்டனர். நாளை (இன்று) தண்ணீர் வினியோகம் செய்யப்படும் என உறுதியளித்தனர். அனைவரும் கலைந்து சென்றனர்.
துணைத்தலைவர் சதீஷ்குமார் கூறுகையில், ''கிருஷ்ணா நகர் பகுதிக்கு தண்ணீர் சப்ளையாகும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை மாற்றும் பணி இன்று (நேற்று) முடிவடையும். நாளை (இன்று) தண்ணீர் சப்ளை செய்யப்படும்,'' என்றார்,