/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆப்பரேஷன் சிந்தூர் ஊர்வலம்; பொதுமக்கள் பங்கேற்பு ஆப்பரேஷன் சிந்தூர் ஊர்வலம்; பொதுமக்கள் பங்கேற்பு
ஆப்பரேஷன் சிந்தூர் ஊர்வலம்; பொதுமக்கள் பங்கேற்பு
ஆப்பரேஷன் சிந்தூர் ஊர்வலம்; பொதுமக்கள் பங்கேற்பு
ஆப்பரேஷன் சிந்தூர் ஊர்வலம்; பொதுமக்கள் பங்கேற்பு
ADDED : மே 27, 2025 09:44 PM

பெ.நா.பாளையம்; ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் வெற்றி வாகை சூடிய ராணுவ வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்து, பெரியநாயக்கன்பாளையத்தில் ஊர்வலம் நடந்தது.
கோவை மாநகர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் நகர் மண்டல் பா.ஜ., கட்சி சார்பில் ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து, பெரியநாயக்கன்பாளையம் ஐந்து கார்னர் பகுதியில் இருந்து போலீஸ் ஸ்டேஷன் வரை ஊர்வலம் நடந்தது. இதில், பா.ஜ., கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கைகளில் தேசிய கொடி ஏந்தி கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், பெரியநாயக்கன்பாளையம் நகர் மண்டல் தலைவர் லோகேஷ் ராம், தொழில் பிரிவு மாவட்ட செயலாளர் ரவிக்குமார், மாவட்ட துணை தலைவர் திருநாவுக்கரசு, மண்டல் பொதுச்செயலாளர் கிஷோர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். * காரமடை கன்னார்பாளையம் சாலையில் துவங்கிய இந்த பேரணியில் கட்சி கொடியை தவிர்த்து தேசியக் கொடிகளை ஏந்தி பா.ஜ.,வினர் பேரணியாக காரமடை சாலை வரை நடந்து சென்றனர். அவர்கள் கையில் பிடித்திருந்த பேனரில் 'ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றிக் கண்ட வீரர்களுக்கும், வெற்றிக்கு வித்திட்ட பிரதமர் மோடிக்கும் நன்றி' என குறிப்பிட்டிருந்தது. இந்த பேரணியில் கோவை வடக்கு பா.ஜ.,மாவட்ட தலைவர் மாரிமுத்து, பொதுச்செயலாளர் விக்னேஷ், முன்னாள் மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் சதீஸ்குமார் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.