Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'ஆப்ரேஷன் சிந்துார்' உரைவீச்சு; 29ம் தேதி கோவையில் நடக்கிறது

'ஆப்ரேஷன் சிந்துார்' உரைவீச்சு; 29ம் தேதி கோவையில் நடக்கிறது

'ஆப்ரேஷன் சிந்துார்' உரைவீச்சு; 29ம் தேதி கோவையில் நடக்கிறது

'ஆப்ரேஷன் சிந்துார்' உரைவீச்சு; 29ம் தேதி கோவையில் நடக்கிறது

ADDED : ஜூன் 26, 2025 10:07 PM


Google News
கோவை; 'தினமலர்' நாளிதழ் மற்றும் சாணக்யா சார்பில் ஆப்ரேஷன் சிந்துார் பெருமையை பறைசாற்றும் உரை வீச்சு நிகழ்ச்சி கோவையில் வரும், 29ம் தேதி நடக்கிறது.

பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், மதத்தை கேட்ட பின், ஆண்களை மட்டுமே சுட்டுக் கொன்றனர்.

இதில், இந்திய கடற்படை அதிகாரி வினய் நர்வால் உட்பட, 26 பேர் உயிரிழந்தனர். மனைவியரின் கண் முன்னே, கணவர்களை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

இதனால், 25 பெண்கள் விதவையாகினர். கணவனை இழந்த பெண்களுக்கு நீதி கிடைக்கும் வகையில், ஆப்ரேஷன் சிந்துார் என்ற பெயரை பிரதமர் மோடி தேர்வு செய்து, அதை வெற்றிகரமாக நடத்தியும் காட்டினார். இந்த பதிலடி மூலம் பாகிஸ்தானுக்கு தக்க பாடத்தை இந்திய ராணுவம் புகட்டியது.

ஆப்ரேஷன் சிந்துார் இந்தியாவின் பெருமையை உலகுக்கு பறைசாற்றியதுடன், வல்லரசு நாடுகள் இந்தியாவின் ராணுவ பலத்தை கண்டு வியக்க வைக்கும் நிகழ்வாகவும் இருந்தது.

ஆப்ரேஷன் சிந்துாரின் பெருமையை, கோவை மக்களுக்கு பறைசாற்ற, 'தினமலர்' நாளிதழ் மற்றும் சாணக்யா இணைந்து உரை வீச்சு எனும் நிகழ்ச்சியை நடத்துகின்றன. வரும் 29ம் தேதி, ஞாயிறு மாலை 6:00 மணிக்கு, கோவை ஆர்.எஸ்.புரம், கிக்கானி பள்ளி கலையரங்கில் நிகழ்ச்சி நடக்க உள்ளது.

ஆப்ரேஷன் சிந்துார் குறித்து ஓய்வு பெற்ற லெப்டினன்ட் கர்னல் தியாகராஜன், பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் ஆகியோர் பேசுகின்றனர்.

சாணக்யாவின் முதன்மை செயல் அலுவலர் ஆர்.ரங்கராஜ் பாண்டே வரவேற்கிறார். சிறப்பு விருந்தினர்களின் உரைக்கு பின், கேள்வி, பதில் நிகழ்ச்சியும் நடக்கிறது.

நம் தலைமுறையும், இனி வரும் தலைமுறையும் பெருமை பட வேண்டிய சரித்திர நிகழ்வு குறித்து துல்லியமாக தெரிந்துகொள்ள, அனைவரும் வரலாம். அனுமதி இலவசம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us