/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
ADDED : ஜன 10, 2024 10:27 PM

பொள்ளாச்சி : ஆழியாறு அணையில் இருந்து, பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு, நேற்று தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பொள்ளாச்சி, ஆழியாறு அணையில், சேகரிக்கப்படும் தண்ணீர் பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு, கேரள நீர் பாசனத்திற்கும் வழங்கப்படுகிறது. இதுதவிர, குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆழியாறில் இருந்து, பழைய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள, 6,400 ஏக்கர் நிலங்களும், புதிய ஆயக்கட்டு பாசனத்தில், 42 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில், பழைய ஆயக்கட்டில், இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, போராட்டமும் நடத்தப்பட்டது. அதன்பேரில், அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. அரசு அனுமதி அளித்த நிலையில், நேற்று காலை, பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு, தண்ணீர் திறக்கப்பட்டது.
மார்ச் 10ம் தேதி வரை, 60 நாட்களில், 30 நாட்கள் தண்ணீர் திறப்பு என்ற அடிப்படையில், நீர் இருப்பு மற்றும் தேவைக்கு ஏற்ப, 350 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படவுள்ளதாக, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தண்ணீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.