/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/'அன்பு, அமைதியால் மட்டுமே: மாற்றத்தை ஏற்படுத்த முடியும்!''அன்பு, அமைதியால் மட்டுமே: மாற்றத்தை ஏற்படுத்த முடியும்!'
'அன்பு, அமைதியால் மட்டுமே: மாற்றத்தை ஏற்படுத்த முடியும்!'
'அன்பு, அமைதியால் மட்டுமே: மாற்றத்தை ஏற்படுத்த முடியும்!'
'அன்பு, அமைதியால் மட்டுமே: மாற்றத்தை ஏற்படுத்த முடியும்!'
ADDED : ஜன 04, 2024 11:35 PM

பொள்ளாச்சி;ரோட்டரி கிளப் ஆப் பொள்ளாச்சி சார்பில், தொழில்சார் மேலாண்மை விருது வழங்கும் நிகழ்ச்சி, ரோட்டரி ஹாலில் நடந்தது.ரோட்டரி மாவட்ட கவர்னர் சுந்தரராஜன், டாக்டர் செல்வராஜ், ரோட்டரி மாவட்ட தொழிற்கல்வி தலைவர் கோரா கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
ைஹதராபாத்தில் உள்ள தடுப்பூசி தயாரிக்கு, இந்தியன் இம்யுனோலஜிகல்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குனர் டாக்டர் ஆனந்தகுமாருக்கு, ரோட்டரி சார்பில் விருது வழங்கப்பட்டது.
விருது பெற்ற டாக்டர் ஆனந்த்குமார் பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன்புதுாரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விருது பெற்ற டாக்டர் பேசியதாவது:
நாம் முடிந்தவரை அனைவருக்கும் உதவி செய்வதுடன் அன்பு செலுத்த வேண்டும். பணத்தால் சந்தோஷத்தை வாங்க முடியாது. அன்பு, அமைதியால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
புதியதாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் என்னை மேம்படுத்தியது. எந்த நிறுவனத்தில் பணியாற்றினாலும், உண்மையாக, நேர்மையாக பணியாற்ற வேண்டும். அப்போது தான், சுதந்திரமாக செயல்பட முடியும். புதியதாக சிந்திக்க முடியும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
ரோட்டரி சங்க தலைவர் அருள்முருகு, செயலாளர் சதீஷ் சந்திரன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.